நேரலை

நுவரெலியா பேருந்து நிலையத்தில் தொலைபேசி கடையில் திருட்டு முயற்சி: CCTV காட்சிகளுடன் பொலிஸார் விசாரணை!

வெளியீடு: August 15, 2026 | எழுதியவர்: Vizhiththirai

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருடும் முயற்சி ஒன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது.

நேற்று (14) இரவு 10.45 மணியளவில் கடடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அதன் கதவிலிருந்த பூட்டைத் திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயன்றுள்ளார்.

எனினும், பூட்டைத் திறக்க முடியாததால் அவரது முயற்சி கைக்கூடாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் பூட்டைத் திறக்க போராடும் காட்சிகள் அங்குள்ள CCTV கமரா அமைப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, CCTV காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல்: ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா