நேரலை

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி; போட்டி அட்டவணை வெளியானது

வெளியீடு: August 20, 2026 | எழுதியவர்: Vizhiththirai

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடருக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

ஒக்டோபர் 9ஆம் திகதி T20I தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், 11 மற்றும் 13ஆம் திகதிகளில் அடுத்து இரண்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இதனை தொடர்ந்து ஒக்டோபர் 18ஆம் திகதி முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், ஒக்டோபர் 31ஆம் திகதி இந்த தொடர் நிறைவடையவுள்ளது.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரையடுத்து நவம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி லாஹூரில் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நவம்பர் 4 முதல் 6ஆம் திகதிவரை இஸ்லாமாபாத்தில் மூன்று நாள் பயிற்சிப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை

  • முதல் T20I – ஒக்டோபர் 9 (ராவல்பிண்டி)
  • இரண்டாவது T20I – ஒக்டோபர் 11 (ராவல்பிண்டி)
  • மூன்றாவது T20I – ஒக்டோபர் 13 (ராவல்பிண்டி)
  • பயிற்சிப்போட்டி – நவம்பர் 4-6 (இஸ்லாமாபாத்)
  • முதல் டெஸ்ட் – நவம்பர் 9-13 (ராவல்பிண்டி)
  • இரண்டாவது டெஸ்ட் – நவம்பர் 17-21 (லாஹூர்)

முத்தரப்பு தொடரின் போட்டி அட்டவணை

  • ஒக்டோபர் 18 – பாகிஸ்தான் எதிர் இலங்கை (ராவல்பிண்டி)
  • ஒக்டோபர் 20 – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து (ராவல்பிண்டி)
  • ஒக்டோபர் 22 – இங்கிலாந்து எதிர் இலங்கை (ராவல்பிண்டி)
  • ஒக்டோபர் 25 – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து (லாஹூர்)
  • ஒக்டோபர் 27 – பாகிஸ்தான் எதிர் இலங்கை (லாஹூர்)
  • ஒக்டோபர் 29 – இங்கிலாந்து எதிர் இலங்கை (லாஹூர்)
  • ஒக்டோபர் 31 – இறுதிப்போட்டி (லாஹூர்)